சுடச்சுட

  

  பூபதி-போபண்ணா விவகாரம்: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

  Published on : 26th September 2012 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  பெங்களூர், செப்.22: மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் 2 ஆண்டுகாலம் இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதித்த ஏஐடிஏவின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பயஸýடன் இணைந்து விளையாட மறுத்ததன் எதிரொலியாக சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

  இதனிடையே அவர்கள் இருவரையும் 2014 ஜூன் 30 வரை அணிக்குத் தேர்வு செய்யமாட்டோம் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) கடந்த வாரம் அறிவித்தது.

  ஏஐடிஏவின் இந்தத் தடையை எதிர்த்து பூபதி, போபண்ணா ஆகியோர் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆதித்யா சோந்தி, "இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீரர்கள் இருவரையும் அழைத்து ஏஐடிஏ விசாரிக்கவில்லை. ஏஐடிஏ தன்னிச்சையான முறையில் இந்த முடிவை எடுத்துள்ளது.

  தடை விதித்தது தொடர்பாக வீரர்களுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அவர்கள் தெரிந்துகொண்டுள்ளனர்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  இதை சனிக்கிழமை விசாரித்த நீதிபதி மோகன் சந்தனகெüடா, வீரர்கள் மீதான 2 ஆண்டுகால தடைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக ஏஐடிஏவுக்கும், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும் அவசர நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

  கடந்த வாரம் ஏஐடிஏ தடை விதித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ் பூபதி, நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியிருந்தார்.

  அதன்படி இப்போது தடை உத்தரவும் பெற்றுவிட்டார். அவசர நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால் அடுத்த சில தினங்களுக்குள் ஏஐடிஏ தனது பதிலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai