சுடச்சுட

  
  spt3

  மும்பை, செப்.23: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை, அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினார் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா.

  இந்தத் தகவலை சச்சின் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். "எனது வீட்டில் இருப்பவர் யார் என்று கண்டுபிடியுங்கள். மிகச்சிறந்த வீரர், அற்புதமான நண்பர்' என்று லாரா குறித்து சச்சின் வர்ணித்துள்ளார்.

  சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினும், லாராவும் சமகாலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  சச்சின் ஓய்வுபெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில், "சச்சின் மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடலாம். சிறப்புமிக்க வீரரான அவர் ஓய்வுபெறும் தருணம், கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பாக அமையும் என்று லாரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai