சுடச்சுட

  

  கொழும்பு, செப்.23:  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 17 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

  ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்த ஆஸ்திரேலியா, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றான "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. கொழும்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிறிஸ் கெயில், சாமுவேல்ஸ் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

  பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி வெற்றிக்கான இலக்கு 9.1 ஓவர்களில் 83 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா 100 ரன்கள் எடுத்திருந்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  சுருக்கமான ஸ்கோர்

  மேற்கிந்தியத் தீவுகள் - 191/8

  (கெயில் 54, சாமுவேல்ஸ் 50, ஸ்டார்க் 3வி/35)

  ஆஸ்திரேலியா - 100/1

  (வாட்சன் 41, வார்னர் 28, மைக் ஹசி 28,

   எட்வர்ட்ஸ் 1வி/16)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai