சுடச்சுட

  
  spt5

  சண்டீகர், செப்.23: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது தந்தை யோகராஜ் மற்றும் தனது வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதுகிறார்.

  இது தொடர்பாக அவரது தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய நடிகருமான யோகராஜ் சிங் கூறியது: யுவராஜ் சிங் என்னைப் பற்றி புத்தகம் எழுதுகிறார். அதற்கு "அரோகன்ட் மாஸ்டர்' என்று பெயரிட்டுள்ளார். நாங்கள் இருவரும் ஒன்றாக வசித்த காலத்தில் நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றிய விஷயங்கள் இதில் இடம்பெறுகிறது. இதேபோல் அவர் கிரிக்கெட் வீரர் ஆனது, புற்றுநோயுடன் போராடியது, கடவுளின் ஆசிர்வாதத்தால் அதிலிருந்து மீண்டு வந்தது உள்ளிட்ட விஷயங்களும் இந்த புத்தக்கத்தில் இடம்பெறும் என்றார்.

  புத்தகத்திற்கு "அரோகன்ட் மாஸ்டர்' என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வியெழுப்பியபோது, "யுவராஜ் சிறுவனாக இருந்தபோது ஸ்கேட்டிங் மீது ஆர்வமாக இருந்தார். டென்னிஸ் விளையாடவும் விரும்பினார். அவர், கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று நான் விரும்பினேன். கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டே அவரை கிரிக்கெட் விளையாட வைத்தேன். அதனாலேயே அவர் "அரோகன்ட் மாஸ்டர்' என்று புத்தகத்துக்கு பெயரிட்டுள்ளார்.

  யுவராஜ் சிங், விரைவில் தொலைக்காட்சியிலும் தோன்றுகிறார். அப்போது புற்றுநோயுடன் போராடிய தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்வார். புற்றுநோய் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் புனிதமான மனிதராக இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து கடவுளை பிரார்த்திக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். புற்றுநோய்க்குப் பிறகு முதிர்ச்சியடைந்த மனிதனாக மாறியுள்ளார். மிகவும் அமைதியாக இருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த குணமும் மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக இருந்த கடவுளுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்' என்றார்.

  யுவராஜின் தந்தை யோகராஜும் "மை லாஸ்ட் டேய்ஸ்' என்ற பெயரில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். கடும் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இப்போது இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai