சுடச்சுட

  

  விஜய் இரட்டைச் சதம்: ரெஸ்ட் ஆஃப் இந்தியா 607 ரன்களில் டிக்ளேர்

  Published on : 27th September 2012 04:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  பெங்களூர், செப்.23:  இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 165 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 607 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  அந்த அணியின் முரளி விஜய் 394 பந்துகளில் 6 சிக்ஸர், 36 பவுண்டரிகளுடன் 266 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தானைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றது ரெஸ்ட் ஆஃப் இந்தியா.

  பெங்களூரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 151 ரன்களுடனும், பத்ரிநாத் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  விஜய் இரட்டைச் சதம்: 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் முரளி விஜய் இரட்டைச் சதமடித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய பத்ரிநாத்தும் அரைசதம் கடந்தார். அந்த அணி 467 ரன்களை எட்டியபோது பத்ரிநாத் ஆட்டமிழந்தார். 124 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். பத்ரிநாத்-விஜய் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

  சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விஜய், முச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 266 ரன்கள் எடுத்திருந்தபோது மாதுர் கேத்ரி பந்துவீச்சில் கஜேந்திர சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

  ரெஸ்ட் ஆஃப் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 607 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தானைவிட 354 ரன்கள் முன்னிலை பெற்றது ரெஸ்ட் ஆஃப் இந்தியா. ராஜஸ்தான் தரப்பில் மாதுர் கேத்ரி 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  ராஜஸ்தான்-43/1: இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ûஸ ஆடிய ராஜஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

  ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட ராஜஸ்தான் இன்னும் 311 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இரண்டு நாள் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ராஜஸ்தானின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேநேரத்தில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால் இரண்டு நாளும் முழுமையாக விளையாடுவதைத் தவிர ராஜஸ்தானுக்கு வேறு வழியில்லை.  சுருக்கமான ஸ்கோர்

  ராஜஸ்தான் முதல் இன்னிங்ஸ்-253

  (ராபின் பிஸ்ட் 117*, யாக்னிக் 40,

  உமேஷ் யாதவ் 5வி/55)

  2-வது இன்னிங்ஸ்-43/1 (சக்சேனா 17*,

  கனித்கர் 21*, இஷாந்த் சர்மா 1வி/17)

  ரெஸ்ட் ஆஃப் இந்தியா-607/7 (விஜய் 266, ரஹானே 81, புஜாரா 78, மாதுர் கேத்ரி 3வி/125)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai