சுடச்சுட

  
  24spt3

  பெங்களூர், செப். 24: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை ரெஸ்ட் ஆப் இந்தியா அணி ஒரு இன்னிங்ஸ் 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

   பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் 4-வது நாளான திங்கள்கிழமை, ராஜஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  முன்னதாக ரெஸ்ட் ஆஃப் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 607 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்ûஸ டிக்ளேர் செய்தது. ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களே சேர்த்தது.

  ஆட்டத்தின் 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. தோல்வியைத் தவிர்க்க மீதமுள்ள இருநாள்களும் நின்று விளையாட வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி ஞாயிற்றுக்கிழமை பேட்டிங்கை தொடர்ந்தது. எனினும் விக்கெட் வீழ்ச்சியை ராஜஸ்தான் அணியால் தவிர்க்க முடியவில்லை. 275 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது.

  இதன் மூலம் ரஞ்சி கோப்பை போட்டி சாம்பியனான ராஜஸ்தானை வென்று இரானி கோப்பையை ரெஸ்ட் ஆஃப் இந்தியா தக்கவைத்துக் கொண்டது. இரானி கோப்பை போட்டி என்பது ரஞ்சி சாம்பியன் அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையே நடக்கும் போட்டி என்பது நினைவுகூரத்தக்கது.

  சுருக்கமான ஸ்கோர்

  ராஜஸ்தான்

  முதல் இன்னிங்ஸ்-253

  (ராபின் பிஸ்ட் 117*,

  யாக்னிக் 40,

  உமேஷ் யாதவ் 5வி/55)

  2-வது இன்னிங்ஸ்-275

  ( கனிட்கர் 73, பிஸ்ட் 67,

  ஹர்மீத் சிங் 4வி/45)

  ரெஸ்ட் ஆஃப் இந்தியா-607/7

  (விஜய் 266, ரஹானே 81,

  புஜாரா 78,

  மாதுர் கேத்ரி 3வி/125)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai