சுடச்சுட

  

  மும்பை, செப். 24: இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் நடுவர் முன்னிலையில் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

   ஐபிஎல் போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை பிசிசிஐ நிர்வாகம் அதிரடியாக நீக்கிவிட்டது.  இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் டெக்கான் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எதையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

   இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, "வீரர்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தை இப்போது வரை டெக்கான் அணி நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. அந்த நிர்வாகம் பல்வேறு வங்கிகளில் ரூ.4000 கோடி நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது என்று பிசிசிஐ தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

   இதற்கு பதிலளித்த டெக்கான் தரப்பு, அனைத்து நிறுவனங்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் வரும். இதில் இருந்து மீள சிறிது கால அவகாசம் தேவை. தங்கள் நிர்வாகம் ஏற்கெனவே 4 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் பிரச்னை ஏதுமின்றி கலந்து கொண்டு வருகிறது. எனவே டெக்கான் அணி தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதித்து உத்தரவிட வேண்டுமெனவாதிட்டது.

   இதையடுத்து, இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் நடுவர் முன்பு பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பது குறித்து பிசிசிஐ, டெக்கான் அணி நிர்வாகம் யோசிக்க வேண்டுமென நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai