சுடச்சுட

  

  மதுரை, செப். 24: பார்வையற்றோர் தேசிய சதுரங்கப் போட்டி மதுரை மாவட்டம், மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழக மண்டபத்தில் செப்டம்பர் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  இப்போட்டியில், மகாராஷ்டிரம், குஜராத், பிகார், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பார்வையற்ற சதுரங்க வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.  போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், சர்வதேச சதுரங்கப் போட்டிகளுக்கு  அனுப்பி வைக்கப்படுவர்.

  போட்டிகளை மேலூர் சுப்ரீம் அரிமா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது என, தமிழ்நாடு  பார்வையற்றோருக்கான சதுரங்கக் கழகப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai