சுடச்சுட

  

  பெங்களூர், செப். 24: தேசிய ஹாக்கி சாம்பியன் போட்டியில் ஹரியாணா அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

  பெங்களூரில் ஆடவர் சீனியர் தேசிய ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணா அணி மேற்கு வங்கத்தை 8-0 என்ற கணக்கில் வென்றது. இதில் ஹரியாணா அணி தனது 2-வது ஆட்டத்தில் மேற்கு வங்கத்தை எதிர் கொண்டது.

  மேற்கு வங்கம் தனது முதல் ஆடத்தில் 2-1 என்ற கணக்கில் போபால் அணியை வென்றிருந்தது. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது.

  ஆனால் ஹரியாணா வீரர்களின் அதிரடி ஆடத்தை மேற்கு வங்க வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் 0-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.

  மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் - சண்டீகர் அணிகள் மோதின.

   இதில் பஞ்சாப் அணி கோல் மழை பொழிந்தது. அந்த அணி வீரர்கள் மொத்தம் 12 கோல்களை அடித்தனர். ஆனால் சண்டீகர் அணியால் ஒரு கோல் கூட எடுக்க முடியவில்லை.

  ஏர் இந்தியா - மத்தியப் பிரதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், 4-1 என்ற கணக்கில் ஏர் இந்தியா வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai