சுடச்சுட

  
  24spt2

  கொழும்பு, செப். 24: சர்வதேச மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.

  பேட்டிங் தரவரிசையில மிதாலி ராஜ் 3-வது இடத்தையும், பந்து வீச்சு வரிசையில் ஜுலான் கோஸ்வாமி 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஹர்பிரீத் கெüர், பேட்டிங் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளார். ஆல் ரவுண்டர் வரிசையில் இந்தியாவின் அமிதா சர்மா 5-வது இடத்தில் இருக்கிறார்.

  இங்கிலாந்தின் சாரா டெய்லர், ஆஸ்திரேலியாவின் லிசா ஸ்டாகெல்கர் ஆகியோர் முறையே பேட்டிங், பந்துவீச்சில் முதல் இடத்தில் உள்ளனர்.

  மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் கொழும்பில் புதன்கிழமை தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai