சுடச்சுட

  
  24spt1

  கொழும்பு, செப். 24: மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெற அயர்லாந்து அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

  கொழும்பில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி பிரிவின் இறுதி லீக் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் வெல்வது கட்டாயம் என்ற சூழ்நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்தை முதலில் பேட் செய்த அழைத்தது.

  கேப்டன் போர்டர்பீல்ட், ஸ்டிர்லிங் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். போர்டர்பீல்ட், முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார். அடுத்து ஜாய்ஸ் களமிறங்கினார். ஸ்டிர்லிங் - ஜாய்ஸ் ஜோடி மெதுவாக விளையாடி ரன் சேர்ந்தது. 5 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

  இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஆட்டம் தடைபட்டது. இதனால் இரு அணிக்கும் தலா 19 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. ஓ பிரையன் அதிகபட்சமாக 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

  மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில் 3 ஓவர்களில் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். எட்வட்ர்ஸ், ராம்பால், சமி, சுநீல் நாராயண் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக மேற்கிந்தியத்தீவுகள் பேட் செய்யத் தொடங்கும் முன்பு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

  பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai