சுடச்சுட

  

  சிலிகுரி, செப்.25: மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வரும் ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் "சி' பிரிவில் இடம்பெற்றிருந்த ஈஸ்ட் பெங்கால் 4-3 என்ற கோல் கணக்கில் கோழிக்கோடு மிலன் சங்கா அணியை வீழ்த்தியது.  அதேநேரத்தில் "சி' பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப் டி கோவா அணி 1-2 என்ற கணக்கில் ஓ.என்.ஜி.சி. அணியிடம் தோற்றது. இதனால் ஈஸ்ட் பெங்கால் அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஒருவேளை டி கோவா அணி வெற்றி பெற்றிருந்தால், ஈஸ்ட் பெங்கால் அணி அரையிறுதிக்கு நுழைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

  லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் "ஏ' பிரிவில் இருந்து டெம்போ அணியும், "பி' பிரிவில் இருந்து சர்ச்சில் பிரதர்ஸ் அணியும், "சி' பிரிவில் இருந்து கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஈஸ்ட் பெங்கால் அணியும், "டி' பிரிவில் இருந்து நடப்புச் சாம்பியனான சல்காவ்கர் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

  வரும் வியாழக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் அணியும் மோதுகின்றன. அடுத்த நாள் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் சல்காவ்கர் அணியும், டெம்போ அணியும் மோதுகின்றன. வரும் 30-ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai