சுடச்சுட

  

  கொழும்பு, செப். 25: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது மேற்கிந்தியத்தீவுகள்.

  கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான பி பிரிவு லீக் ஆட்டம் மழையால் முடிவு ஏதும் கிடைக்காமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

  இதனால் மேற்கிந்தியத்தீவு, அயர்லாந்து அணிகள் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் இருந்தன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத்தீவுகள் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. அயர்லாந்து வெளியேறியது.

  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்தை முதலில் பேட் செய்த அழைத்தது. அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது.

  மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில் 3 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

  பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட் செய்ய முடியாமல் போனது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai