சுடச்சுட

  
  24spt4

  ஸவ் பாலோ, செப். 25: பிரேசிலின் ஸôவ் பாலோவில் நடைபெற்று வரும் "5-வது செஸ் மாஸ்டர்ஸ் பைனல்' போட்டியில் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் பிரான்ஸிஸ்கோ வாலிஜோ போன்ஸýடன் டிரா செய்தார்.

  6 வீரர்கள் பங்கேற்றுள்ள இப் போட்டி 2 ரவுண்டு ராபின் சுற்றுகளைக் கொண்டது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வாலிஜோ போன்ûஸ எதிர்கொண்ட ஆனந்த், 59-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் ஒரு புள்ளியுடன் ஆனந்த் 3-வது இடத்தில் உள்ளார்.

  ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை தோற்கடித்தார். இதேபோல் இத்தாலியின் பேபியானோ கர்வானா நார்வேயின் மேக்னஸ் கார்ல்ùஸனை வீழ்த்தினார். இதன்மூலம் ஆரோனியனும், பேபியானோவும் தற்போது முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.  

  கடந்த மே மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 5-வது முறையாக பட்டம் வென்ற ஆனந்த், 4 மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai