சுடச்சுட

  

  தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஏர் இந்தியா, மத்தியப் பிரதேசம்

  Published on : 27th September 2012 04:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூர், செப்.25: பெங்களூரில் நடைபெற்று வரும் 2-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஏர் இந்தியா, மத்தியப் பிரதேச அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ஏர் இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் நாகாலாந்தையும், மத்தியப் பிரதேச அணி 11-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறின.

  ஏர் இந்தியா அதிரடி: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏர் இந்தியாவின் அதிரடிக்கு நாகாலாந்து அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் 3-வது நிமிடம் முதல் 68-வது நிமிடம் வரை 16 கோல்களை அடித்து வெற்றி கண்டது ஏர் இந்தியா. அதேநேரத்தில் நாகாலாந்து அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

  ஏர் இந்தியா தரப்பில் நவீன் சங்வான், விக்ரம் பிள்ளை, சோமன்னா ஆகியோர் தலா 3 கோல்களையும், வினோத் பிள்ளை, சந்தீப் சிங், பைரேந்திர லகரா ஆகியோர் தலா இரு கோல்களையும், விகாஸ் பிள்ளை ஒரு கோலையும் அடித்தனர்.

  லீக் சுற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த ஏர் இந்தியா, 3-வது லீக் ஆட்டத்தில் நாகாலாந்தை வீழ்த்தியதன் மூலம் காலிறுதியை உறுதி செய்தது.

  மத்தியப் பிரதேசம் வெற்றி: மற்றொரு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்-மத்தியப் பிரதேச அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய மத்தியப் பிரதேசம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

  முதல் பாதி ஆட்டத்தைப் போலவே, 2-வது பாதியிலும் சிறப்பாக விளையாடிய மத்தியப் பிரதேச வீரர்கள் மேலும் 6 கோல்களை அடித்து 11-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தினர். மற்றொரு லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் ஹாக்கி சங்க அணியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai