சுடச்சுட

  
  spt4

  டோக்கியோ, செப்.25: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்பெயினின் நூரியா லகோஸ்டீரா ஜோடி தோல்வி கண்டது.

  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா-நூரியா ஜோடி 0-6, 6-4, 8-10 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டார்ஜியா ஜுராக்-கேதலின் மரோஸி ஜோடியிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சானியா ஜோடி 0-6 என்ற கணக்கில் இழந்தாலும், பின்னடைவில் இருந்து விரைவாக மீண்டது. இதனால் அடுத்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  பின்னர் நடைபெற்ற டைபிரேக்கர் சுற்றில் கடுமையாகப் போராடியபோதும் சானியா ஜோடியால் அதைக் கைப்பற்ற முடியவில்லை. இதனால் தோல்வி தவிர்க்க முடியாததானது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai