சுடச்சுட

  

  சென்னை, செப்.25: மாநில அளவிலான 7-வது சப்-ஜூனியர் எறிபந்து (த்ரோபால்) சாம்பியன்ஷிப் போட்டி நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் உள்ள கொங்குநாடு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

  போட்டியை மாலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஜெகந்நாதன் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவுக்கு இந்திய எறிபந்து சம்மேளனத்தின் பொருளாளரும், தமிழக எறிபந்து சங்கத்தின் பொதுச் செயலருமான பால விநாயகம் தலைமை வகிக்கிறார்.

  ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் இப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

  போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

  போட்டியின் நிறைவு விழா சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

  மேற்கண்ட தகவல் தமிழ்நாடு எறிபந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai