சுடச்சுட

  

  வீரர்கள் உடல் நலக் குறைவுக்கு குடிநீர் காரணமல்ல: இலங்கை நிறுவனம் மறுப்பு

  Published on : 27th September 2012 04:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொழும்பு, செப். 25: கிரிக்கெட் வீரர்களின் உடல் நலக் குறைவுக்கு எங்களின் குடிநீர் காரணமல்ல என்று குடிநீரை விநியோகித்த இலங்கையின் "லாப்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள நியூஸிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

  இதையடுத்து சுத்தமற்ற தண்ணீரைப் பருகியதாலேயே வீரர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தண்ணீர் விநியோகித்த நிறுவனம் மாற்றப்பட்டுவிட்டதாகவும் ஐசிசி தெரிவித்திருந்தது.

  ஐசிசியின் இந்தப் புகாரை மறுத்துள்ள "லாப்ஸ்' நிறுவனத்தின் மேலாளர் சமிந்தா விஜிசிங்கே, "நாங்கள் தண்ணீரை சோதனை செய்ததில் அதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம்.

  சந்தேகப்படும் படியான குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளை எங்களுக்கு அனுப்புமாறு ஐசிசியிடம் கேட்டோம். ஆனால் அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.

  வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் வேறு நிறுவனங்களின் குடிநீரையும் வாங்கி பருகியிருக்கலாம். அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியாது.

  ஆனால் எங்களின் குடிநீர் காரணம் கிடையாது. அதைத்தான் நான் எப்போதும் குடிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai