சுடச்சுட

  
  spt3

  ஸôவ் பாலோ, செப். 26: பிரேசிலின் ஸôவ் பாலோவில் நடைபெற்று வரும் "5-வது செஸ் மாஸ்டர்ஸ் பைனல்' போட்டியின் 2-வது சுற்றிலும் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துள்ளார்.

  ஏற்கெனவே அவர் தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் பிரான்ஸிஸ்கோ வாலிஜோ போன்ஸýடன் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. 6 வீரர்கள் பங்கேற்றுள்ள இப் போட்டி இரு ரவுண்டு ராபின் சுற்றுகளைக் கொண்டது. இதில் புதன்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தார் இந்தியாவின் ஆனந்த்.

  இத்தாலியின் பேபியானோ கர்வானா தனது 2-வது சுற்றிலும் வெற்றி கண்டுள்ளார். முதல் சுற்றில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்ùஸனை வீழ்த்திய அவர், 2-வது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்ùஸன், ஸ்பெயினின் பிரான்ஸிஸ்கோ வாலிஜோ போன்ûஸ வீழ்த்தினார்.

  கால்பந்து ஸ்கோரிங் முறையில் (வெற்றி பெற்றால் 3 புள்ளிகள், டிரா செய்தால் ஒரு புள்ளி) நடைபெறும் இப் போட்டியின் முதல் இரு சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், இத்தாலியின் பேபியானோ கர்வானா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோன் (4 புள்ளிகள்) 2-வது இடத்திலும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்ùஸன் (3 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளனர். ஆனந்த் 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai