சுடச்சுட

  
  spt5

  மற்றொரு லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்.

  முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  மேற்கிந்தியத் தீவுகளின் டாட்டின் 42 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.

  காலே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்யூஸி படீஸ் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்தது.

  வெற்றி: பின்னர் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், தொடக்க வீராங்கனை டெய்லருடன் ஜோடி சேர்ந்தார் டாட்டின்.

  டெய்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டாட்டின் 36 பந்துகளில் அரை சதமடித்தார். 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  அதிரடியாக விளையாடிய டாட்டின் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai