சுடச்சுட

  

  பாங்காக், செப்.26: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடி முன்னேறியுள்ளது.

  தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இப் போட்டி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் பயஸ்-டீக்கா ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தியது.

  பயஸ்-டீக்கா ஜோடி தங்களின் அடுத்த சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் வாஸ்கே ஜோடியை சந்திக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai