சுடச்சுட

  

  பெங்களூர், செப். 26: பெங்களூரில் நடைபெற்று வரும் 2-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரம்-ஹரியாணா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் டிராவில் (2-2) முடிந்தது.

  புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தை டிரா செய்ததன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது மகாராஷ்டிரம். ஏற்கெனவே முதல் 3 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்ட ஹரியாணா காலிறுதிக்குத் தகுதி பெற்று விட்டது.

  இந்திய பல்கலைக்கழகங்கள்-பிகார் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் டிராவில் (1-1) முடிந்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் தில்லி அணி 5-3 என்ற கோல் கணக்கில் இமாசலப் பிரதேச அணியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai