சுடச்சுட

  
  spt4

  காலே, செப். 26: மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.

  முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  இலங்கையின் காலே நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் இலங்கையின் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மிடில் ஆர்டரில் சுரன்ஜிகா மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி 79 ரன்களுக்கு சுருண்டது.

  பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஃபிரிட்ஸ் 14 ரன்களும், ஷெட்டி 33 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய  சுசன் பெனாடி 7, பிரீஸ் 5 ரன்களில் வெளியேறினர். நீகெர்க் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.

  33 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஷெட்டி ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai