சுடச்சுட

  
  29spt4

  கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பபிதா குமாரி (51 கிலோ) தங்கம் வென்றார்.

  "ரெபிசேஜ்' சுற்றில் ரஷியாவின் ஸமிரா ரக்மனோவாவை தோற்கடித்ததன் மூலம் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார் பபிதா. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். முதல் வீராங்கனை அல்கா தோமர் ஆவார்.

  இவர் 2006-ல் சீனாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  எட்மான்டனில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பபிதா உள்ளிட்ட 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

  இவர்களில் சில்பி ஷியோரான் (59 கிலோ), நவ்ஜோத் கெüர் (67 கிலோ) ஆகியோர் தங்களின் எடைப் பிரிவுகளில் 5 இடத்தைப் பிடித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai