சுடச்சுட

  
  29spt2

  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் "சூப்பர் 8' சுற்றில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்.

  முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தபோது, 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய உமர் குல் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

  தடுமாறிய தென் ஆப்பிரிக்கா: கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே அந்த அணி சரிவுக்குள்ளானது. ஆம்லா 6, ரிச்சர்ட் லெவி 8, காலிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 6.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

  பின்னர் வந்தவர்களில் பெஹார்டியன் 18 ரன்களில் வெளியேற, டுமினியுடன் ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். 18 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார்.

  அதிரடியாக விளையாடிய டுமினி 38 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.

  பாகிஸ்தான் தரப்பில் யாசிர் அராபத், முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  சரிவுக்குள்ளான பாகிஸ்தான்: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் இம்ரான் நசிர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் முகமது ஹபீஸ், பீட்டர்சன் ஓவரில் கிரீûஸ விட்டு முன்னேறி வந்து அடித்து ஆட முற்பட்டார். ஆனால் அவரது கணிப்பு தவறாகவே டிவில்லியர்ஸôல் ஸ்டெம்பிட் ஆக்கப்பட்டார். 9 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து வந்த நசிர் ஜம்ஷெத் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஸ்டெம்பிட் ஆனார். கம்ரான் அக்மல் ஒரு ரன் எடுத்திருந்தபோது போத்தா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஷோயிப் மாலிக் 12, அப்ரிதி 0, யாசிர் அராபத் 3 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது 15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது பாகிஸ்தான்.

  அதிரடி திருப்பம்: இதையடுத்து உமர் அக்மலுடன் இணைந்தார் உமர் குல். யாரும் எதிர்பார்க்காத வகையில் காலிஸ் வீசிய 16-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசினார் குல். அல்பி மோர்கல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் உமர் அக்மல் ஒரு பவுண்டரியை விரட்டினார். அதே ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸரை விரட்டிய உமர் குல், அடுத்த பந்தில் பவுண்டரியை விரட்டினார். இதனால் ஆட்டம் பாகிஸ்தான் வசம் திரும்பியது. கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் உமர் குல் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

  பரபரப்பு: கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மோர்ன் மோர்கல் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தை சிறப்பாக வீசிய மோர்கல், அடுத்த பந்தை "புல் டாஸôக' வீசினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட உமர் அக்மல் சிக்ஸராக மாற்ற, பாகிஸ்தானின் வெற்றி எளிதானது. அடுத்த பந்தில் அக்மல் ஒரு ரன் எடுக்க, 4-வது பந்தில் அஜ்மல் பவுண்டரி அடித்தார். இதனால் பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  உமர் அக்மல் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், அஜ்மல் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேல் ஸ்டெயின் 3 விக்கெட் வீழ்த்தினார். பீட்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்த உமர் குல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  சுருக்கமான ஸ்கோர்

  தென் ஆப்பிரிக்கா - 133/6

  (டுமினி 48, டிவில்லியர்ஸ் 25,

  ஹபீஸ் 2வி/23)

  பாகிஸ்தான் - 136/8

  (உமர் அக்மல் 43*,

  உமர் குல் 32,

  ஸ்டெயின் 3வி/22)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai