சுடச்சுட

  
  1spt29

  மும்பையில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் செஸ் போட்டியில் நெய்வேலி வீராங்கனை ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

  தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் ஸ்ரீஜா பட்டம் வெல்வது இதுவே முதல்முறை. வியாழக்கிழமை நடைபெற்ற 11-வது சுற்றில் தமிழகத்தின் மற்றொரு வீராங்கனையான ஸ்வேதாவை தோற்கடித்ததன் மூலம் 9 புள்ளிகளுடன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்ரீஜா. 2009-ல் நடைபெற்ற ஆசிய அளவிலான 12 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரீஜா, "சப்-ஜூனியர் போட்டியில் பட்டம் வென்றது என்னுடைய செஸ் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. போட்டி மிகவும் சவாலாக இருந்தது. 9-வது சுற்றில் மகாராஷ்டிரத்தின் பர்னாலி எஸ்.தாரியாவிடம் தோற்றாலும், அது எனது அடுத்த சுற்று ஆட்டங்களை பாதிக்கவில்லை. பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது' என்றார்.

  15 வயதாகும் ஸ்ரீஜா, இப்போது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். காலாண்டுத் தேர்வை எழுதாமல், செஸ் விளையாட சென்ற இவர் வெற்றியோடு திரும்பியுள்ளார். அடுத்ததாக படிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai