சுடச்சுட

  
  29spt3

  பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், இந்திய விமான படைக்குச் சொந்தமான போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார்.

  ஹைதராபாதின் திண்டிகுல் பகுதியில் உள்ள பயிற்சி அகாதெமியில் இருந்து "கிரண் ஜெட் ட்ரெய்னர்' போர் விமானத்தில் வெள்ளிக்கிழமை 20 நிமிடம் விண்ணில் பறந்தார்.

  அதன்பிறகு அவர் கூறியது: இந்த வாய்ப்பை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெüரவமாகக் கருதுகிறேன்.

  இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. விமானம் புறப்படும்போது சற்று பயமாக இருந்தது. மேகக்கூட்டங்களுக்குள் விமானம் சென்றபோது சிறிது பதற்றமடைந்தேன்.

  இது ஒரு சிறந்த அனுபவம். இதன்மூலம் பாட்மிண்டனில் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாகத் தெரிவித்தார்.

  ராணுவ பயிற்சி அகாதெமி விளையாட்டு நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சாய்னா அழைக்கப்பட்டிருந்தார்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai