சுடச்சுட

    
    konery29

    துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற மகளிர் கிராண்ட்ப்ரீ செஸ் போட்டியில் இந்தியாவின்

    கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். 11 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியின் கடைசிச் சுற்றில் போலந்தின் மோனிகா சகோவை வீழ்த்தினார். இதனால் அவர் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ப்ரீ தொடரில் ஒட்டு மொத்த அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் கொனேரு ஹம்பி. உலக சாம்பியனான சீனாவின் ஹூ இஃபான் ஒட்டு மொத்தமாக முதலிடத்தைப் பிடித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai