சுடச்சுட

  

  முதல்வர் கோப்பைக்கான மாநில தட களப் போட்டி சென்னையில் தொடக்கம்

  By dn  |   Published on : 29th September 2012 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் கோப்பைக்கான முதலாவது மாநில தட களப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் இப் போட்டியில் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5000 மீ. ஆடவர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் ராமச்சந்திரன் (நீலகிரி) முதலிடத்தையும், மணிகண்டன் (விழுப்புரம்) 2-வது இடத்தையும், எழில்நிலவன் (சென்னை) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  ஆடவர் வட்டு எறிதல் பிரிவின் இறுதிச் சுற்றில் திவாகர் ராஜா (சேலம்) முதலிடத்தையும், சந்தோஷ் தேவதாஸ் (கன்னியாகுமரி) 2-வது இடத்தையும், படேல் செüமடா (காஞ்சிபுரம்) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  மகளிர் மும்முறைத் தாண்டுதலில் ரோஸிலி மெக்ஃபேர்லன் (சென்னை) முதலிடத்தையும், சிவ அன்பரசி (கோவை) 2-வது இடத்தையும், வைஷ்ணவி (நாகப்பட்டினம்) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai