சுடச்சுட

  
  4spt29

  நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் கரோல் வெய்முல்லர் ஓபன் கோல்டு 50 ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் தீபிகா பலிக்கல் தோல்வி கண்டார்.

  வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தீபிகா 9-11, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜென்னி டங்கால்ஃப்பிடம் தோல்வி கண்டார். டங்கால்ஃப் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இப் போட்டியில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி குறித்து டங்கால்ஃப் கூறுகையில், "முதல் சுற்றில் 3-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

  கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது தீபிகாவிடம் நல்ல முன்னேற்றம் உள்ளது. அதனால் நானும் அவரை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆரம்பத்தில் இருந்தே சுதாரிப்போடு விளையாடினேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai