சுடச்சுட

  

  2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை.

  முன்னதாக போட்டியை நடத்த இந்தியா விரும்புவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  இப்போதைய நிலையில், துபை, ஹனோய் மற்றும் சுரபயா (இந்தோனேசியா) ஆகியவை போட்டியிடுகின்றன.

  போட்டியை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வது குறித்து, அடுத்த வாரத்தில் ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் மதிப்பீட்டுக் குழுவினர் இந்த 3 நகரங்களுக்கும் செல்ல உள்ளனர்.

  சீனாவில் உள்ள மகாவ் நகரில், 31-வது ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக் கூட்டம் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

  இக்கூட்டத்தில் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் போட்டியை நடத்தும் நகரம் தேர்ந்தெடுக்கப்படும் என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

  2014-ம் ஆண்டில் தென்கொரியாவின் இன்ஷியோன் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai