சுடச்சுட

  
  sptinda2

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா.

  கொழும்பில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும்பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை சற்றேறக்குறைய நெருங்கிவிடும். ஆனால் இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்குமானால் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.

  இக்கட்டான சுழலில்... முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ள நிலையில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்கு மத்தியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா. ஏற்கெனவே பயிற்சி ஆட்டத்திலும் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றுள்ளது.

  கடந்த ஆட்டத்தில் 5 பெüலர்களுடன் களமிறங்கிய இந்திய கேப்டன் தோனியின் வியூகத்தை ஆஸ்திரேலியர்கள் தகர்த்தனர். அஸ்வின், ஹர்பஜன், பியூஷ் சாவ்லா என கிடைத்த பெüலர்களை எல்லாம் அவர்கள் பதம்பார்த்தனர்.

  நல்ல தொடக்கம் அமையாததால் இந்திய பேட்டிங் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டுவிடுகிறது.

  கம்பீர், கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரையே இந்திய அணி நம்பியுள்ளது. கேப்டன் தோனியின் ஆட்டத்தில் வேகம் இல்லாதது பெரும் பின்னடைவாகும். கடைசிக் கட்ட ஓவர்களில்கூட ஆமை வேகத்தில் விளையாடி வருகிறார்.

  கவலையளிக்கும் பந்துவீச்சு: இந்திய அணியின் பெüலிங் மிக மோசமாக உள்ளது. 5 முன்னணி பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியபோதும் ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் பந்துவீசவில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற இந்திய பௌலர்கள் சிறப்பாக பந்துவீசுவது முக்கியமாகும்.

  பலம் வாய்ந்த பாகிஸ்தான்: பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் பேட்டிங், பெüலிங் மட்டுமின்றி ஆல்ரவுண்டர்களையும் உள்ளடக்கிய பலம் வாய்ந்த அணியாக உள்ளது. அந்த அணியின் 9-வது வீரர்கூட பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்.

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அதிரடியாக விளையாடி திருப்புமுனையை ஏற்படுத்தினார். கேப்டன் முகமது ஹபீஸ், இம்ரான் நசிர், நசிர் ஜம்ஷெத், கம்ரான் அக்மல், உமர் அக்மல், ஷோயிப் மாலிக் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் உமர் குல், சோஹைல் தன்வீர், முகமது சமி என 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அந்த அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல், அப்ரிதி கூட்டணி வலு சேர்க்கிறது.

  இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை. ஆனாலும் பாகிஸ்தான் எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்று கணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. மொத்தத்தில் வழக்கம்போல் இந்த ஆட்டமும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

  இதுவரை... இதுவரை இவ்விரு அணிகளும் 2 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடியுள்ளன. ஓர் ஆட்டத்தில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இந்த இரு ஆட்டங்களுமே 2007 உலகக் கோப்பையில் நடைபெற்றதாகும். அந்தப் போட்டியில் லீக் ஆட்டம் "டை'யில் முடிந்தது.

  இதையடுத்து "போல்டு அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இந்தியா வெற்றி கண்டது. ஆனாலும் போட்டிகள் குறித்த பட்டியலில் அது முடிவு எட்டப்படாத ஆட்டமாகவே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.  இதேபோல் இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

   

  அரையிறுதி வாய்ப்பு எப்படி?

  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் பாகிஸ்தானிடம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்காவும் தோற்கும்பட்சத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தோற்றாலும், அதன்பிறகு நடைபெறும் ஆட்டங்களை பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு அமையும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai