சுடச்சுட

  
  sptjayawar

  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை. இதன்மூலம் அரையிறுதி வாய்ப்பையும் நெருங்கிவிட்டது இலங்கை.

  முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.  பல்லகெலேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் , இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஜசார்லஸ் 21 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  

  கெய்ல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸýம், பிராவோவும் 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். பிராவோ 34 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.  அதிரடியாக விளையாடிய சாமுவேல்ஸ் 34 பந்துகளில் அரை சதமடித்தார். 35 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சாமுவேல்ஸ். இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

   இலங்கைத் தரப்பில் மெண்டிஸ் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  ஜெயவர்த்தனா சாதனை: பின்னர் ஆடிய இலங்கை அணியில் தில்ஷான் 13 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஜெயவர்த்தனாவுடன் இணைந்தார் குமார் சங்ககாரா. எளிதான இலக்கு என்பதால் இவர்கள் இருவரும் நெருக்கடியின்றி விளையாடினர். ஜெயவர்த்தனா 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருபது ஓவர் போட்டியில் அவர் அடிக்கும் 6-வது அரை சதம் இது. இதன்மூலம் இருபது ஓவர் போட்டியில் அதிக அரை சதமடித்தவர்கள் வரிசையில் கிறிஸ் கெயிலுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார் ஜெயவர்த்தனா. இறுதியில் அந்த அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஜெயவர்த்தனா 49 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், சங்ககாரா 34 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  "குரூப் 1'-ல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி சூப்பர்-8 சுற்றில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இப்போதைய நிலையில் அதிக ரன் ரேட்டையும் வைத்துள்ளதால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

  சுருக்கமான ஸ்கோர்

  மே.இ.தீவுகள்-129/5

  (சாமுவேல்ஸ் 50, பிராவோ 40,

  மெண்டிஸ் 2வி/12)

  இலங்கை-130/1

  (ஜெயவர்த்தனா 65*,

  சங்ககாரா 39*,

  ராம்பால் 1வி/39)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai