சுடச்சுட

  
  sptAnand

  பிரேசிலின் ஸாவ் பாலோவில் நடைபெற்று வரும் "5-வது செஸ் மாஸ்டர்ஸ் பைனல்' போட்டியின் 4-வது சுற்றையும் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.

  ஏற்கெனவே முதல் 3 சுற்றுகளையும் டிரா செய்திருந்த ஆனந்த், சனிக்கிழமை நடைபெற்ற 4-வது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினுடன் டிரா செய்தார். பார்மில் இல்லாத செர்ஜி கர்ஜாகினை ஆனந்த் எளிதில் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சுற்றையும் ஆனந்த் டிராவில் முடித்துள்ளார்.

  மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் பேபியானோ கர்வானா ஸ்பெயினின் பிரான்சிஸ்கோ வாலிஜோ போன்ûஸ வீழ்த்தினார். ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன்-நார்வேயின் மாக்னஸ் கார்ல்ùஸன் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

  10 சுற்றுகள் கொண்ட இப் போட்டியில் 4 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இத்தாலியின் பேபியானோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 3 வெற்றி, ஒரு டிராவுடன் மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

  இரண்டாவது இடத்தில் இருக்கும் லெவோன் ஆரோனியன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளார். மாக்னஸ் கார்ல்ùஸன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இந்தியாவின் ஆனந்த் 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். வாலிஜோ போன்ஸ், கர்ஜாகின் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளனர்.

  கடந்த மே மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 5-வது முறையாக பட்டம் வென்ற ஆனந்த், 3 மாதங்களுக்குப் பிறகு இப் போட்டியில் களமிறங்கினார். இப் போட்டியில் அவர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 சுற்றுகளிலும் தொடர்ந்து டிரா செய்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai