சுடச்சுட

    
    sptWright

    இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெற்றி கண்டது இங்கிலாந்து.

    லுக் ரைட் 43 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவினார்.  

    முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 7 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

    பல்லகெலேவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. அந்த அணியின் கப்டில் 5, பிரென்டன் மெக்கல்லம் 10, ராப் நிகோல் 11, கேன் வில்லியம்சன் 17 ரன்களில் ஆட்டமிழக்க 11.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து தடுமாறியது.

    பிராங்க்ளின் அரைசதம்: இதன்பிறகு கேப்டன் டெய்லருடன் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. டெய்லர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து வந்த நாதன் மெக்கல்லம் கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை விளாசினார். கடைசி ஓவரின் 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடியபோது பிராங்க்ளின் ரன் அவுட்டார். ஆனால் அவர் முதல் ரன்னை ஓடியபோதே அரைசதத்தை எட்டினார். 33 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. நாதன் மெக்கல்லம் 16, பிரேஸ்வெல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் பின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ரைட் அதிரடி: பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணியில் கீஸ்வெட்டர் 4, அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, லுக் ரைட்டும், இயோன் மோர்கனும் ஜோடி சேர்ந்தனர்.

    மோர்கன் நிதானமாக ஆடினாலும், லுக் ரைட், நியூஸிலாந்து பெüலர்களை பதம்பார்த்தார். டிம் செüதி வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி 33 பந்துகளில் அரைசதம் கண்டார் லுக் ரைட்.

    அதைத்தொடர்ந்து ராப் நிகோல் வீசிய 16-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை விளாசினார் ரைட். அந்த அணி 127 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 31 பந்துகளைச் சந்தித்த மோர்கன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரைட் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 18.5 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இங்கிலாந்து. ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தலா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரைட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    நியூஸிலாந்துக்கு சிக்கல்: சூப்பர் 8 சுற்றின் முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி கண்ட நியூஸிலாந்து, இப்போது இங்கிலாந்திடமும் தோற்றுள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai