சுடச்சுட

  

  பனிச்சறுக்கு விபத்தில் சிக்கிய ஷுமாக்கர் "கோமா'வில் சிகிச்சை

  By dn  |   Published on : 31st December 2013 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Schu

  ஃபிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைச் சரிவில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் கார்பந்தய வீரர் ஷுமாக்கர் (44), விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். "கோமா'வில் உள்ள அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

  ஸ்விட்சர்லாந்தில் வசித்து வரும் ஷுமாக்கர், அடுத்த வாரம் தன் 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தன் குடும்பத்தினருடன் ஃபிரான்ஸ் சென்றிருந்தார்.

  ஃபிரான்ஸின் தெற்கே கிரனோபிள் அருகே உள்ள மலைச்சரிவில் ஞாயிற்றுக்கிழமை தன் 14 வயது மகனுடன் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார்.

  அப்போது ஷுமாக்கர் திடீரென தடுமாறி கீழே விழுந்து பாறை மீது மோதினார். இதனால், தலையில் பலத்த அடிபட்டது. அவர் அப்போது ஹெல்மெட் அணிந்திருந்தார்.

  இருப்பினும், காயம் பெரிய அளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

  அவரை உள்ளூர் போலீஸார் மீட்டு கிரனோபிள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த அடிபட்டதால் சூமாக்கருக்கு மூளை அறுவை சிகிச்சை

  செய்யப்பட்டது. தற்போது அவர் கோமா நிலையில் இருப்பதாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

  "பாதிப்பின் தன்மை ஆரம்பத்தில் நாங்கள் நினைத்ததை விட தற்போது மோசமாக உள்ளது. அவர் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக

  பாரிஸில் இருந்து உயர் நிலை டாக்டர் குழு கிரனோபிள் வந்துள்ளது' என, மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஷுமாக்கரின் மனைவி கரீனா, அவரது

  2 குழந்தைகள் மருத்துவமனையில் உள்ளனர். தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதால், அங்கு

  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஷுமாக்கர் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தித்து வருகின்றனர்.

  முதன்முறையாக 1991-ம் ஆண்டு கார் பந்தயங்களில் பங்கேற்ற ஷுமாக்கர், 7 முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடைசியாக 2004-ம் ஆண்டு

  சாம்பியன் பட்டம் வென்ற அவர் 2012-ல் கார்பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.  உலகிலேயே அதிகளவில் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற ஷுமாக்கர் 91

  வெற்றிகள் குவித்தவர் என்பதும், 300 கிராண்ட்ப்ரீ பந்தயங்களில் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai