சுடச்சுட

  

  இந்திய அணிக்கு பயிற்சியாளராக விருப்பம்: கங்குலி சூசகம்

  By dn  |   Published on : 01st January 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ganguly

  இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புவதாக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

  இப்போது பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளெட்சரின் ஒப்பந்த காலம் 2013ஆம் ஆண்டு மார்ச்சுடன் நிறைவடைய உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனால், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று தெரிகிறது.

  இதனால், அவருக்குப் பதிலாக புதுப்பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, "இந்தியாவில் திறமையான பயிற்சியாளர்கள் உள்ளனர். அணிக்கு இந்தியப் பயிற்சியாளர் தேவை. இந்தியர் ஒருவரை பயிற்சியாளராக நியமிப்பதற்கான தருணம் இப்போது வந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தான் பயிற்சியாளராக வேண்டும் என்று விரும்பியே கங்குலி இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai