சுடச்சுட

  
  PAKARRI

  இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவுக்கு திங்கள்கிழமை வந்தனர்.

  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

  இரண்டாவது ஒருநாள் போட்டி 3ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

  இப்போட்டியில் விளையாட, சென்னையிலிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்கத்தாவை அடைந்தனர். பலத்த பாதுகாப்புடன் ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியினர் ஈடன் கார்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அணியின் மேலாளர் தெரிவித்தார்.

  2ஆவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் நடைபெறவுள்ளது.

  தோனி, பிளெட்சர் வருகை: இந்திய அணியின் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெட்சர், ரவீந்திர ஜடேஜா மற்றும் அசோக் திண்டா ஆகியோரும் திங்கள்கிழமையே கொல்கத்தா வந்தடைந்தனர். அணியின் மற்ற வீரர்கள் செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவுக்கு வருவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai