சுடச்சுட

  

  சென்னை ஓபன்: முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி தோல்வி

  By - ஏ.வி.பெருமாள் -  |   Published on : 01st January 2013 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  31spt1

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி முதல் சுற்றில் போராடித் தோல்வி கண்டார்.

  பாம்ப்ரி தனது முதல் சுற்றில் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியிடம் ஆட்டமிழந்தார்.

  18-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

  பிரதான மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் 217-வது இடத்தில் உள்ளவரும், இந்தியாவின் வைல்டுகார்ட் வீரருமான யூகி பாம்ப்ரி, தரவரிசையில் 56-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை எதிர்கொண்டார். ஆட்டத்தின் முதல் செட்டின் முதல் கேமில் ராபின் ஹேஸியின் சர்வீûஸ எதிர்கொள்ள யூகி பாம்ப்ரி தடுமாறினார். இதனால் அந்த சர்வீûஸ எளிதாக தன்வசமாக்கினார் ஹேஸி. அடுத்த கேமில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த யூகி பாம்ப்ரி, இறுதியில் அபாரமாக ஆடி அந்த சர்வீûஸ தன்வசப்படுத்தினார். இதன்பிறகு ராபின் ஹேஸிக்கு கடும் சவால் அளித்தார். இதனால் போராடியே தனது சர்வீûஸ தக்க வைத்துக் கொண்டார் ஹேஸி. அதேவேளையில் யூகி பாம்ப்ரியும் தனது சர்வீûஸ தக்க வைத்ததால், ஆட்டம் டைபிரேக்கருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் 11-வது கேமில் சிறப்பாக ஆடிய ஹேஸி, கடைசி கேமில் மிக எளிதாக யூகி பாம்ப்ரியின் சர்வீûஸ முறியடித்து அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 53 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் முதல் 5 கேம் வரை யூகி பாம்ப்ரி சிறப்பாக விளையாடினர். ஆனால் 6-வது கேமில் தனது சர்வீûஸ போராடித் தக்கவைத்த பாம்ப்ரி, 8-வது கேமில் மோசமான ஷாட்களை ஆடி தனது சர்வீûஸ ஹேஸியிடம் இழந்தார். அடுத்த கேமில் தனது சர்வீஸை தன்வசமாக்கிய ஹேஸி 6-3 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி வெற்றி கண்டார்.

  இளம் வீரரான யூகி பாம்ப்ரி, தரவரிசையில் 200 இடங்களுக்கு மேல் இருந்தாலும், முன்னணி வீரரான ராபின் ஹேஸிக்கு கடும் சவால் அளித்தார். பல முறை அவரைத் திணறடித்தார். மொத்தத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது யூகி பாம்ப்ரியின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருந்ததைக் காண முடிந்தது. அவரின் சர்வீஸில் வேகம் இருந்ததோடு, சில நல்ல ஏஸ் சர்வீஸ்களையும் அடித்தார்.

  கோ ஸþய்டா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் கோ ஸþய்டாவும், ரஷியாவின் ஈவ்ஜெனி டான்ஸ்காயும் மோதினர்.

  இதில் டான்ஸ்காயின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படியில்லை. மோசமான ஷாட்களை ஆடிய அவர், முதல் செட்டில் தனது முதல் சர்வீûஸயே இழந்தார். இதனால் 2-வது கேமிலேயே 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார் கோ ஸþய்டா.

  டான்ஸ்காய் தொடர்ந்து பந்துகளை உயரத்தில் தூக்கியடித்து மோசமான ஷாட்களை ஆடியதால், பந்து அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு வெளியில் சென்றது.

  இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸþய்டா 6-வது கேமில் மீண்டும் டான்ஸ்காயின் சர்வீûஸ முறியடித்து, 26 நிமிடங்களில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் அந்த செட் 6-1 என்ற கணக்கில் ஸþய்டா வசமானது. 

  பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் தொடக்கத்தில் டான்ஸ்காய் சற்று போராடினார். எனினும் நீண்ட நேரம் அது நீடிக்கவில்லை. 5 மற்றும் 7-வது கேம்களில் டான்ஸ்காயின் சர்வீûஸ முறியடித்த ஸþய்டா, 6-2 என்ற கணக்கில் இந்த செட்டை கைப்பற்றினார். இந்த செட் 33 நிமிடங்களில் முடிந்தது. மொத்தத்தில் இந்த ஆட்டம் 59 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. மிக எளிதாக வெற்றி கண்ட ஸþய்டா, இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்தார். இவர் கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  பிரதான சுற்றில் பிரகாஷ் அமிர்தராஜ்: திங்கள்கிழமை நடைபெற்ற ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜேம்ஸ் வார்டை வீழ்த்தி பிரதான சுற்றில் விளையாட தகுதிபெற்றார்.

  விஷ்ணு-சனம் ஜோடி தோல்வி: இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் விஷ்ணுவர்தன்-சனம் சிங் ஜோடி 2-6, 7-5, 7-10 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா-பிரான்ஸின் பெனாய்ட் பெய்ரே ஜோடியிடம் தோல்வி கண்டது.

   

  இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய ஆட்டங்கள்

  ஒற்றையர் பிரிவு:

  பிரகாஷ் அமிர்தராஜ் (இந்தியா)-கில்லாமே ரூஃபின் (பிரான்ஸ்)

  சோம்தேவ் (இந்தியா) -

  ஜான் ஹயெக் (செக்.குடியரசு)

  இரட்டையர் பிரிவு:

  லியாண்டர் பயஸ் (இந்தியா)-ரோஜர் வேஸலின் (பிரான்ஸ்)

  சஞ்சய் ரதிவதனா-

  சன்சாட் ரதிவதனா (தாய்லாந்து)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai