சுடச்சுட

  
  Mahesh-boobathy

  டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி இந்தியாவின் சார்பில் டேவிஸ் டென்னிஸ் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

  லண்டன் ஒலிம்பிக் போட்டியின் இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து பூபதி விளையாடினார். இது ஒலிம்பிக் போட்டித் தேர்வுக் குழுவின் விருப்பத்துக்கு மாறாக அமைந்தது.

  ஒலிம்பிக் போட்டிக்குப் பின், பூபதி மற்றும் போபண்ணாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் தடை விதித்தது.

  இதனால், இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டியில் அவர்கள் பங்கேற்க முடியாத சூழல் உருவானது.

  இந்நிலையில், இந்தியாவின் சார்பில் டேவிஸ் கோப்பையில் விளையாட பூபதிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

  இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறுகையில், "டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வுக்கு என்னை பரிசீலிக்கலாமா என்று கேட்டு இந்திய டென்னிஸ் சங்கம் மின்னஞ்சல் அனுப்பியது. அதற்கு நான் சம்மதம் தெரிவித்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai