சுடச்சுட

  
  deepika

  தேசிய வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தீபிகா குமாரி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 7 பதக்கங்களைக் கைப்பற்றினார்.

  33ஆவது தேசிய வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒட்டு மொத்தமாக இரும்பு ஆலைகள் விளையாட்டு வாரிய வீராங்கனையான தீபிகா குமாரி 7 பதக்கங்களைக் கைப்பற்றினார்.

  ரயில்வே வீராங்கனையான டோலா பானர்ஜி 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 6 பதக்கங்களைக் கைப்பற்றினார்.

  ஆடவர் பிரிவில் ராகுல் பானர்ஜி 5 பதக்கங்களை (1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்) வென்றார். ராஜிப் பாசுமத்ரி மற்றும் மங்கல் சிங் ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai