சுடச்சுட

  

  மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டன்

  By dn  |   Published on : 01st January 2013 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  MithaliRaj

  2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய  அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டி வரும் ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

  இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இப்போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

  அணி வீராங்கனைகள் விவரம்:

  மிதாலி ராஜ் (கே), ஹர்மன்

  பிரீத் கெளர், ஜூலன் கோஸ்வாமி, அமிதா சர்மா, கெளஹர் சுல்தானா, எம் திருஷ்காமினி, சுலக்ஷணா நாயக், ஏக்தா பிஸ்ட், மோனா மெஷ்ரம், ரசானாரா பர்வீன், நிரஞ்சனா நாகராஜன், பூனம் ராவுத், ரீமா மல்ஹோத்ரா, கருணா ஜெயின், சுபலக்ஷ்மி சர்மா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai