சுடச்சுட

  

  ரஞ்சி கிரிக்கெட்: காலிறுதிக்கு முன்னேறியது உத்தரப் பிரதேசம்

  By dn  |   Published on : 01st January 2013 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 9ஆவது சுற்றில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றது.

  இந்த வெற்றியின் மூலம் "பி' பிரிவில் 33 புள்ளிகள் பெற்று முதல் அணியாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

  ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய உத்தரப் பிரதேசம் 160 ரன்களுக்கும், ஒடிசா 127 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.33 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய உத்தரப்பிரதேசம் 2ஆவது இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், 145 ரன்களை இலக்காக நிர்ணயித்து களமிறங்கிய ஒடிசா 2ஆம் நாள் முடிவில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

  தொடர்ந்து ஆடிய அந்த அணி 3ஆம் நாளில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் உத்தரப் பிரதேச அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai