சுடச்சுட

  

  இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்: கொல்கத்தா மைதான பராமரிப்பு முறையில் மாற்றம்

  By dn  |   Published on : 02nd January 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  paki1

  இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

  இதையடுத்து மைதானத்தில் பராமரிப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆடுகளம் எதிர்பாராத வகையில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையாத வண்ணம் பார்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து மைதானத்தில் உள்ள புற்களுக்கு நீர் தெளிப்பது போட்டிக்கு மூன்று நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. பனிப் பொழிவு காரணமாக புற்களில் ஏற்கெனவே நீர் போதுமான அளவு இருப்பதே இதற்குக் காரணம்.

  ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருக்கும் என்று மைதான பராமரிப்பாளர் பிரவீர் முகர்ஜி கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களை வீச முடியும். அதே நேரத்தில் இறுதிக் கட்டத்தில் சுழற்பந்து வீச்சும் எடுபடும்.

  இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் நடைபெற்ற அதே ஆடுகளத்தில்தான் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. மைதானத்தில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியதால், இந்திய விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன.

  இதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்திருந்தாலும், இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai