சுடச்சுட

  
  SanjayBangar

  இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வரும், ரயில்வே அணியின் கேப்டனுமான சஞ்சய் பாங்கர், முதல்தர கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  ரஞ்சி கிரிக்கெட் லீக் அவரது தலைமையில் ரயில்வே அணி, பெங்கால் அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் அவர் தனது ஓய்வை அறிவித்தார். 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்றது சிறப்புக்குரிய ஒன்று என அவர் கூறிப்பிட்டுள்ளார்.

  40 வயதாகும் அவர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்று 470 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்த ஒரு சதமும் அடங்கும். 15 ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

  ஆல் ரவுண்டரான அவர், 165 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்று 8,342 ரன்களையும், 300 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai