சுடச்சுட

  

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ், சோம்தேவ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றவரான பிரகாஷ் தனது முதல் சுற்றில் 6-7 (4) என்ற கணக்கில் பின்தங்கியபோதும், அடுத்த இரு செட்களையும் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி தரவரிசையில் 92-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கிலாமே ரூஃபினுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தார்.

  18-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரகாஷ் அமிர்தராஜ், பிரான்ஸின் ரூஃபினை எதிர்கொண்டார். முதல் செட்டில் ரூஃபின் டபுள் ஃபால்ட் தவறு செய்ததால் தனது முதல் சர்வீûஸயே பிரகாஷிடம் இழக்க நேர்ந்தது. அவ்வப்போது அதிரடி ஏஸ் சர்வீஸ்களை அடித்த பிரகாஷ் 5 கேம்களின் முடிவில் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

  ஆனால் 6-வது கேமில் அபாரமாக ஆடிய ரூஃபின், பிரகாஷின் சர்வீûஸ முறியடிக்க இருவரும் 3-3 என்ற சமநிலையை எட்டினர்.

  இதன்பிறகு பிரகாஷ் கடுமையாகப் போராடியபோதும் ரூஃபினின் சர்வீûஸ முறியடிக்க முடியவில்லை. இதனால் 12 கேம்களின் முடிவில் இருவரும் 6-6 என்ற சமநிலையை எட்டவே, ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. டைபிரேக்கரின் தொடக்கத்தில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பிரகாஷ், அதன்பிறகு சரிவைச் சந்தித்தார். இதனால் டைபிரேக்கர் செட்டை 4-7 என்ற கணக்கில் ரூஃபினிடம் இழந்தார். இதனால் ரூஃபின் முதல் செட்டை 7-6 (4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 1 மணி நேரம் 9 நிமிடங்கள் நீடித்தது.

  முதல் செட்டை இழந்தபோதும், பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் 6-வது கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரகாஷ், ரூஃபினின் சர்வீûஸ எளிதாக முறியடித்தார். இதனால் 6 கேம்களின் முடிவில் 4-2 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். 7-வது கேமில் பிரகாஷின் சர்வீûஸ கைப்பற்ற ரூஃபின் கடுமையாகப் போராடினார்.

  எனினும் தொடர்ந்து போராடிய பிரகாஷ், அந்த சர்வீûஸ தன்வசமாக்கினார். அடுத்த கேமில் மீண்டும் ரூஃபினின் சர்வீûஸ முறியடித்த பிரகாஷ், 8 கேம்களிலேயே இந்த செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனால் இந்த செட் 6-2 என்ற கணக்கில் பிரகாஷ் வசமானது. விறுவிறுப்பாக சென்ற இந்த செட் 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

  இதன்பிறகு வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் தொடக்கம் முதலே பிரகாஷ் ஆக்ரோஷமாக ஆடினார்.

  இந்த செட்டின் 2-வது கேமில் ரூஃபின் 2 டபுள் ஃபால்ட் தவறுகளை செய்யவே, அவரிடம் இருந்து சர்வீûஸப் பறித்தார் பிரகாஷ். 4-வது கேமிலும் பிரகாஷ் அபாரமாக ஆடினார். இதனால் அந்த கேமில் கடுமையாகப் போராடிய ரூஃபின், நூலிழையில் தனது சர்வீûஸ தன்வசமாக்கினார். களைப்படைந்தபோதிலும், தொடர்ந்து போராடிய பிரகாஷ், 9-வது கேமில் தனது சர்வீûஸ தன்வசமாக்கியதன் மூலம் 6-3 என்ற கணக்கில் இந்த செட்டைக் கைப்பற்றினார்.

  இதன்மூலம் பிரகாஷ் 6-7 (4), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்றது.

  வழக்கமாக 3 செட்கள் வரை ஆட்டம் செல்லும்போது களைப்பின் காரணமாக இந்திய வீரர்கள் தோற்றுவிடுவார்கள். ஆனால் இந்த ஆட்டம் 3-வது செட் வரை சென்றாலும், மிகுந்த களைப்படைந்த நிலையிலும் கூட சிறப்பாக ஆடி வெற்றி கண்டார் இளம் வீரரான பிரகாஷ் அமிர்தராஜ். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் சர்வீûஸ அடித்தார். முதல் செட்டில் 5 ஏஸ் சர்வீஸ்களையும், 3-வது செட்டில் 4 ஏஸ் சர்வீஸ்களையும் அடித்தார்.  இவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் கோ ஸþய்டாவை சந்திக்கிறார். முன்னணி வீரரான கோ ஸþய்டாவுடனான ஆட்டம் பிரகாஷுக்கு கடினமானதாக இருக்கும். ஸþய்டா கடந்த சென்னை ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  சோம்தேவ் வெற்றி: மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 663-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சோம்தேவ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 106-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் ஜான் ஹயெக்கை வீழ்த்தினார்.

  இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் முதல் மற்றும் 9-வது கேம்களில் ஹயெக்கின் சர்வீûஸ முறியடித்த சோம்தேவ், 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை 33 நிமிடங்களில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் 3-வது கேமில் சோம்தேவின் சர்வீûஸ முறியடித்தார் ஹயெக். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட சோம்தேவ், அடுத்த கேமில் ஹயெக்கின் சர்வீûஸ முறியடித்தார்.

  இதன்பிறகு 6-வது கேமில் மீண்டும் ஹயெக்கின் சர்வீûஸ முறியடித்த சோம்தேவ், 9-வது கேமில் இந்த செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த செட்டையும் அவர் 6-3 என்ற கணக்கிலேயே வென்றார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்தது.

  சோம்தேவ், அடுத்த சுற்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். எனவே இந்த சுற்றை சோம்தேவ் தாண்டுவது கடினமே.

  மற்ற ஆட்டங்கள்...

  மற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ஜெர்மனியின் மேத்தியாஸ் பச்சின்ஜெர் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் தைவானின் யென் சன் லூவையும், பிரான்ஸின் பெனாய்ட் பெய்ரெ 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியோ சிப்போலாவையும், ஸ்பெயினின் ராபெர்ட்டா பெüதிஸ்டா 7-6, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் பிளேஸ் காவ்சிச்சையும் வீழ்த்தினர்.

   

  இந்திய வீரர்கள் இன்று

  பங்கேற்கும் ஆட்டங்கள்

  ஒற்றையர் பிரிவு

  பிரகாஷ் அமிர்தராஜ் (இந்தியா)-கோ ஸþய்டா (ஜப்பான்)

  இரட்டையர் பிரிவு

  மகேஷ் பூபதி (இந்தியா) ,

  டேனியல் நெஸ்டர் (கனடா) -

  ஸ்ரீராம் பாலாஜி,

  ஜீவன் நெடுஞ்செழியன்

  (இந்தியா)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai