சுடச்சுட

  
  maria

  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ரஷியாவின் மரியா ஷரபோவா விலகியுள்ளார்.

  தோள்பட்டை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாகத் தெரிகிறது. முதல் சுற்றில் இத்தாலியின் சாரா இரானியை வென்ற அவர் இரண்டாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா கஜ்டோúஸôவாவை எதிர்கொள்ள இருந்தார்.

  சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் ஷரபோவா இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். போட்டியில் இருந்து விலகியது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இப்போட்டியில் பங்கு பெறுவதற்கு முன்பே வேகமாக சர்வீஸ் செய்வதில் பிரச்னை இருந்தது. தோள்பட்டை எலும்பில் லேசாக காயம் ஏற்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன் என்று ஷரபோவா தெரிவித்துள்ளார்.

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜனவரி 14 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஷரபோவா காயமடைந்திருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai