சுடச்சுட

  

  ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிக்கு மும்பை, கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

  செவ்வாய்க்கிழமை முடிவடைந்த குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தை மும்பை டிரா செய்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் காலிறுதி வாய்ப்பைப் பெற்றது மும்பை.

  குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 447 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

  மும்பை அணியின் வாஸிம் ஜாஃபர் முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் எடுத்தார்.

  கர்நாடகம் அபார வெற்றி: புணேயில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி மகாராஷ்டிரத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அந்த அணியும் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. மகாராஷ்டிர வீரர் அங்கித் பவன் 155 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். எனினும் அது வெற்றிக்கு உதவவில்லை.

  இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் கர்நாடகம் 9 விக்கெட் இழப்புக்கு 572 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மகாராஷ்டிரம் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் பாலோ ஆன் செய்து விளையாடிய மகாராஷ்டிரம் இரண்டாவது இன்னிங்ஸில் 561 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கர்நாடகம் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து வென்றது.

  சென்னை - ஹரியாணா டிரா: ரஞ்சி கிரிக்கெட்டியில் சென்னையில் நடைபெற்ற சென்னை - ஹரியாணா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

  சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. அடுத்த இருநாள்கள் பேட் செய்த தமிழக அணி 6 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தினேஷ் கார்த்திக் 187 ரன்களும், விஜய் சங்கர் 100 ரன்களும் எடுத்தனர். விஜய் சங்கர் கடைசி வரை களத்தில் இருந்தார். ஆட்டத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஹரியாணா அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இப்போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

  மத்தியப்பிரதேசத்தை வென்றது செüராஷ்டிரம்: மற்றொரு ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்தை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது செüராஷ்டிரம்.

  இதன் மூலம் அடுத்த "நாக் அவுட்' சுற்றுக்கு செüராஷ்டிரம் முன்னேறியுள்ளது. அந்த அணி ரஞ்சிக் கோப்பையில் முதல்முறையாக பங்கேற்கிறது என்பது முக்கியமானது.

  குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4ஆவது, இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மத்தியப்பிரதேச அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  செüராஷ்டிர வேகப்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜா 26.4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். முன்னதாக செüராஷ்டிரம் தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

  மத்தியப் பிரதேச அணி முதல் இன்னிங்ûஸ 135 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ûஸ 183 ரன்களுக்கும் இழந்தது. செüராஷ்டிர அணியில் புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai