சுடச்சுட

  
  sachin2

  ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்காக களமிறங்க இருக்கிறார்.

  ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் சச்சின் பங்கேற்கும் முதல் கிரிக்கெட் போட்டி இது. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  மும்பை அணி காலிறுதி ஆட்டத்தில் பரோடா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வரும் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

  இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க துணை செயலாளர் நிதின் தலால் கூறியது: ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டத்துக்கான அணி வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட இருக்கிறது. பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் கண்டிப்பாக இடம் பெறுவார்.

  ஜாகீர் கானை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யவில்லை. அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவரை அணிக்கு தேர்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai