சுடச்சுட

  
  abinav

  இங்கிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய ஏ அணிக்கு அபினவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ளது.இதற்கு முன்னதாக, இந்திய ஏ அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் வரும் 6ஆம் தேதியும், கடைசி பயிற்சி ஆட்டம் 8ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

  இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஏ அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அணி வீரர்கள் விவரம்: அபினவ் முகுந்த் (கே), முரளி விஜய், ராபின் பிஸ்ட், கேதர் ஜாதவ், அசோக் மெனேரியா, ரோஹித் மோத்வானி, ஜலஜ் சக்சேனா, ரிஷி தவான், பராஸ் தோக்ரா, மொஹித் சர்மா, ரசூல் பர்வேஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai